Search
Generic filters

Select Volume

Number (Issue)

முனைவர் ப. மகேஸ்வரி,

தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு ஆகும். இந்நூலில் காணப்படும் எண்ணங்களும் சொற்களும் இலக்கணவொழுக்கமும் இலக்கியச்செறிவும் பெற்றுத் திகழ்கின்றன. தமிழ் மக்களின் நல்லொழுக்கத்தையும் சீரிய நாகரிகப்பண்பாட்டையும் பல்வேறு ஊர்களின் பழைமயையும் விளக்கி நிற்கின்றன. தமிழக வரலாற்றை அறிய உதவும் சான்றுகளை காலவாரியான பகுப்பு, சான்றுவாரியான பகுப்பு எனப் பிரிப்பர். கே.ஏ. நீலகண்டசாஸ்திரி தன்னுடைய தென்னிந்திய வரலாறு என்ற நூலில் கல்வெட்டுகளே இந்திய வரலாற்றிற்குக் குறிப்பாகத் தென்னிந்திய வரலாற்றிற்கான வளமிக்க நம்பகமான சான்றுகளாகும் என்று குறிப்பிட்டுள்ளார். நடுகல் வடிவில் அமைந்த கல்வெட்டுக்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. புறநானூற்றில் கல்வெட்டுகள் வழியாக அறியலாகும் ஊர்களைச் சுட்டுவதே இவண் நோக்கம்.

முனைவர் ரா.திவ்யா

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களிடம் காண்கின்ற சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனைகள் பழந்தமிழரிடத்தும் இருந்துள்ளமைப் பற்றி இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. சங்க இலக்கியத்தில் சூழ் என்ற வினை சூழ்ந்திருத்தல், படர்தல், ஆராய்தல், கருதுதல், ஆலோசித்தல் என்று ஒரு சொல் பல பொருளாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனித வாழ்வு பிறரையும், பிற பொருள்களையும் சூழ்ந்த வாழ்வாக அமைந்துள்ளது. சூழ்தல் என்பது மனிதன் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிப்பதாகும். பழந்தமிழர்கள் காடுகளை அழித்து நாடாக்கி வாழ்வது நாகரிகமாகக் கருதப்பட்டது. அதன் சமன் நிலையை குளம் போன்று உருவாக்கி பேணிப் பாதுகாத்துள்ளனர். ஐம்பூதங்களின் அவசியத்தை, “மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலை இய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போல” என்ற புறநானூற்றுப் பாடல் மானிடத்தின் தேவைக்குப் பயன்பட வேண்டும் என்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் சூழலியல் சார்ந்த சிந்தனை இருந்தமை அறியமுடிகிறது

மு.கயல்விழி,

இசை நுட்பமான கலைகளில் ஒன்று. இது மனிதனின் மனதை சாந்தப்படுத்தி இன்புறச் செய்யும் இயல்;புடையது. இசையால் வசமாகாத உயிர்கள் உலகில் இல. இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளான ஜெயதேவர், சண்டிதாஸ், தான்சேன் போன்றவர்களும், மேல்நாட்டு இசை வல்லுனர்களான மொஸார்ட் (Wolfgang Amadeus Mozart), பீத்தோவான் (Ludwig van Beethoven), பாக் (Johann Sebastian Bach) போன்றோரும் தம் இசைத்திறனுக்காக இன்றும் புகழப்படுவதை நாம் மறந்து விடலாகாது. எனவே தான் நம் தமிழ்ச் சான்றோர்கள் இசைத்தமிழை உருவாக்கி மகிழ்ந்தனர். சோழர் காலத்தில் எல்லாக் கலைகளையும் போல் நுண் கலையான இசைக்கலையும் சிறப்பு பெற்றது. சோழநாட்டில் தமிழிசைக் கலை ஆலயங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், திருவிழாக் கூட்டங்கள், கூத்து மேடைகளில் வளர்க்கப்பட்டது. தமிழகத்தை எத்தனையோ அரசு மரபினர் ஆண்ட போதிலும் சோழரைப் போன்று தமிழிசை வளர்த்தவர்கள் ஒருவரும் இலர். அவர்கள் காலத்தில் இசைக்கலை தன் உச்ச நிலையை எட்டிற்று. எனவேதான் இக்காலத்தை தமிழிசையின் பொற்காலம் என்று போற்றுகின்றனர். சோழநாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் இசைக்கலையை நன்கு வளர்த்தனர். நுண்கலைப் புரவலர்களான சோழமன்னர்கள் சிறப்பு வாய்ந்த இசைக்கலையைப் போற்றியது வியப்பன்று. இசையால் தமிழ் வளர்ந்தது, தமிழால் இசை உயர்ந்தது.

வே.முரளிகிருஷ்ணன்,

இயற்கையின் ஆற்றலைக் கண்டு அஞ்சிய மனிதன் இதன் சீற்றத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக, வழிபாடுகளையும் விழாக்களையும் தோற்றுவித்தான.; காலப்போக்கில் இயற்கைக்கு உருவம் கொடுத்து வழித் தொடங்கினான.; ஆரம்ப காலத்தில் வழிபாட்டிற்கு அடிப்படையாக மந்திரம் மட்டுமே தோன்ற, பின் வழிபாடும் சமய விழாக்களும் தோன்றின. ஒவ்வொரு பெயரையும் இறைவனுக்குச் சார்த்தி வழிபாட்டு முறைமைகளில் வேறுபாட்டை கொண்டனர். அதிலும் இசக்கியம்மன் வழிபாட்டு முறைகளைப்பற்றி இங்கு காணலாம்.

க.இளையராஜா

நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகளில் ஒன்றாக ஒயிலாட்டகலைக் குறித்தும் அக்கலை சிவகாசி வட்டாரத்தில் நலிவடைவதை மீட்டுருவாக்கம் செய்யும் பொருட்டு இளையநிலா ஒயிலாட்டக்கலைக்குழு நிகழ்த்தப்பட்டு வருவதை குறித்து ஆய்வதாக இக்கட்டுரை நோக்கமாக அமைகிறது.

த.விஜயலட்சுமி

தேனும் பாலும் ஊட்டி வளர்த்த மகள,; தனக்கு ஒத்த ஆண்மகனோடு களவு வாழ்வினை மேற்கொண்டு, கற்பு வாழ்வினை நிகழ்த்த தன் சுற்றம் அறியாமல் தலைவனோடு செல்லுதல் உடன்போக்கு ஆகும். சங்க கால வாழ்வில் இந்நிகழ்வு கற்பு வாழ்விற்கு அடித்தளமாக அமைகின்றது. உடன் போக்கினை மேற்கொண்ட தனது மகளை எண்ணி வருந்தும் ஒரு தாயின் உணர்வு நிலையினை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.